யூத, கிறிஸ்தவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளலாமா?-K.M.H அபூ அப்தில்லாஹ்

யூத, கிறிஸ்தவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளலாமா?

ஐயம்: ‘யூத, கிறிஸ்தவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்! அப்படிச் செய்பவர்கள் அவர்களில் ஒருவராக ஆகிவிடுகிறார்’ என்று அல்குர்ஆன் 5:51வது வசனம் குறிப்பிடுகின்றது. மதச்சார்ப்பற்ற நாடு களில் வாழும் முஸ்லிம்கள் எவ்வாறு இதைக்கடைபிடிப்பது?
மீரான், பாளையம்

தெளிவு:K.M.H அபூ அப்தில்லாஹ்

இந்த குர்ஆன் வசனத்திற்கு விளக்கமாக இன்னும் சில வசனங்கள் இருக்கின்றன. அதைக் கவனிக்காததால் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்கள் தவறாக எண்ணுகின்றனர்.

”மார்க்க விஷயத்தில் உங்களுடன் போருக்கு வராத, உங்கள் ஊர்களிலிருந்து உங்களை (விரட்டி) அப்புறப் படுத்தாதவர்களுக்கு நல்லு தவி செய்வதை யும், அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்கு தடுக்க வில்லை”.அல்குர்ஆன் 60:89,90

இந்த இறைவசனம் மிகத் தெளிவாக இஸ்லாத்தின் நிலையை விளக்குகின்றது. நம்முடன் வலிய மார்க்க விஷயத்தில் போர் புரிபவர்களையும் நமது சொந்த இல்லங்களிலிருந்து விரட்டி அடிப்பவர்களையும் தாம் பகைவர்களாகக் கருதுகிறது.

“உனது பெற்றோர் இருவரும், எனக்கு இணைவைக்கும்படி வற்புறுத்தினால் அவர்களுக்கு நீ கட்டுப்படாதே! இந்த உலகில் அவ் விருவருடனும் நல்ல தோழமையுடன் நடந்துகொள்!” (அல்குர் ஆன் 31:15) என்ற வசனமும் நீங்கள் சுட்டிக்காட்டிய வசனத்திற்கு சரியான விளக்கமாகும்.

அவர்களுடன் நாம் கொள்கின்ற நட்பு, நமது கொள்கையை விட்டுக் கொடுப்பதாக அமையக்கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறுமை வாழ்க்கை -பதில்: டாக்டர் ஜாகிர் நாயக்

ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?- பி.ஜே