ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?- பி.ஜே
ஆன்லைன் பி.ஜே · www.onlinepj.com
ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?
கேள்வி :
ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் பைத்தியம் பிடித்த ஒரு குழந்தையை கொண்டு வந்து காட்டினார். அக்குழந்தையைத் தமது கையில் எடுத்த நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்! அல்லாஹ்வின் விரோதியே வெளியே செல்! நான் அல்லாஹ்வுடைய தூதர்!' என்று கூறினார்கள். குழந்தை குணமடைந்தது.
(அஹ்மது, ஹாகிம், பைஹகீ)
'மாலையும் இரவும் சந்திக்கும்) அந்தி நேரத்தில் உங்கள் குழந்தைகளை வீட்டினுள் வைத்திருங்கள்,அது ஷைத்தான் வெளிவரும் சமயம் ஆகும்' நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),
நூல்: முஸ்லிம்).'
பாலைவனங்களிலும் குகைகளிலும் தனித்திருப்பது தடுக்கப்பட்டுள்ளது ஏனெனில் அங்கு ஷைத்தான் இருப்பான்' நபிமொழி.(மனிதர்கள் மலம், ஜலம், கழிக்க ஒதுங்குகின்ற) இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள்(ஜின்,ஷைத்தான்கள் அடிக்கடி) வந்து போகும் பகுதிகளாகும்.எனவே உங்களில் ஒருவர்(அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போது, அவர்,'அவூது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸி' என்று கூறுவாராக! என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது 6)'
ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஓர் ஆதிக்கம் உண்டு. அது போலவே வானவருக்கும் ஒர் ஆதிக்கம் உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி),
நூல்: திர்மிதி)
இந்த ஹதீஸ்கள் ஆதரப்பூர்வமானதா? இதன் அடிப்படையில் ஷைத்தான் மனிதன் மீது மேலாடுவான் என்று எடுத்துக் கொள்ளமா?
அப்துல் அலீம் அய்யம்பேட்டை
பதில் :
இந்த ஹதீஸ்கள் சரியானவையா என்பதை அறிவதற்கு முன்னால் இன்னொரு முக்கியமான விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
ஷைத்தான் என்றால் யார்? அவனுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் என்ன? ஷைத்தான் என்று கூறப்படும் அனைத்து ஹதீஸ்களிலும் ஷைத்தான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டுமா? இதை புரிந்து கொண்டால தான் மேற்கணட் ஹதீஸ்களையும் இந்தக் கருத்தில் அமைந்த மற்ற ஹதீஸ்களையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள முடியும்.
ஜின் இனத்தைச் சார்ந்தவன் தான் ஷைத்தான். ஷைத்தான் நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லோரிடமும் இருக்கிறான். இதற்கு நல்லவர்களோ சஹபாக்களோ விதிவிலக்கில்லை.
ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் உள்ள ஷைத்தான் மட்டும் நபியவர்களுக்குக் கட்டுப்பட்டு விட்டான். இவன் மற்ற அனைவரிடமும் இருந்து கொண்டு கெட்ட எண்ணங்களை ஏற்படுத்துவான். நல்லவர்கள் இவன் கூறுவதைப் புறக்கணித்து விடுவார்கள். தீயவர்கள் செயல்படுத்துவார்கள் என்பது ஷைத்தானைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம்..
إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِنْ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُمْ مُبْصِرُونَ(201)7
(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
அல்குர்ஆன் (7 : 201)
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்ட போது, "ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டு விட்டாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?'' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்' என்றார்கள். "ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் "ஆம்' என்றார்கள். நான், "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்து விட்டான்'' என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (5422)
எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையைப் பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படும் போது அவர்களிடத்தில் மட்டும் ஷைத்தான் வந்துவிட்டதாக தவறாக நம்புகிறார்கள்.
ஷைத்தான் ஒருவரிடத்தில் இருப்பதால் அவருக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்மையானால் மனிதர்கள் அனைவருக்கும் அப்படி பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட வேண்டும். ஏனென்றால் ஷைத்தான் அனைவரிடமும் இருக்கிறான்.
ஆனால் இவ்வாறு அனைவருக்கும் பைத்தியமோ மோசமான நோய்களோ உளறல்களோ ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் இது போன்ற பலவீனங்கள் ஏற்படுகிறது. இறைவனுடைய நாட்டத்தால் இந்த பலவீனங்கள் ஏற்படுகிறதே தவிர ஷைத்தானால் ஏற்படுவதில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.
3281حَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا أَوْ قَالَ شَيْئًا رواه البخاري
ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்கüடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். - உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது- (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்'' என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், "அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் ...அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்'' என்று சொன்னார்கள்.
புகாரி (3281)
ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே ஷைத்தான் நமது உடலில் இரண்டறக் கலந்துள்ளான் என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.
அடுத்து உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தைப் போட்டு விடுவான் என்று அஞ்சுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உடலில் இரண்டறக் கலந்துள்ள ஷைத்தானால் உள்ளத்தில் தீய எண்ணங்களை மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
ளஷைத்தான் நமது உடலுடன் கலந்திருந்தாலும் தீய எண்ணங்களை மட்டுமே அவனால் ஏற்படுத்த முடியுமே தவிர கை கால்களை முடக்குவதோ நோய்களை ஏற்படுத்துவதோ பைத்தியமாக்குவதோ ஷைத்தானால் முடியாத காரியம்.
ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்
ஷைத்தானை விரட்டுவதாகக் கூறி சம்பாதிக்க நினைப்பவர்களும் மக்களை ஏமாற்றுபவர்களும் ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் இடஞ்சல்களை விவரிக்கும் சில ஹதீஸ்களை மக்களிடம் சொல்கிறார்கள்.
ஷைத்தானால் மனிதனுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுவதால் மனிதனை விட்டும் ஷைத்தானை நாங்கள் விரட்டுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வி கேட்டு பாமர மக்களை வழிகெடுக்கிறார்கள்.
இவர்கள் தங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு ஹதீஸ்களில் சொல்லப்பட்ட இடஞ்சல்கள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தர முடியுமா?
தொழுகையில் கவனம் திரும்புவது கொட்டாவி விடுவது சுப்ஹ‚ தொழாமல் உறங்குவது இவையெல்லாம் ஷைத்தானால் ஏற்படுவதாக ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.
அப்படியென்றால் இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்குத் தொழுகையில் கவனம் திரும்பாதா? அவர்களுக்கு இனி கொட்டாவியே வராதா? அவர்கள் சுப்ஹ‚ தொழுகையை விடாமல் கடைப்பிடிப்பார்களா? ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்களுக்குத் தவறான எண்ணங்களே ஏற்படாதா? இந்த அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலே ஷைத்தானை விரட்டுவதாக இவர்கள் கூறுவது வடிகட்டியப் பொய் என்பதை அறியலாம்.
அனைவரிடமிருந்தும் ஷைத்தானை விரட்டுவார்களா?
ஷைத்தான் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அப்படியென்றால் ஷைத்தானை விரட்டுவதாக கூறும் போலி ஆண்மீகவாதிகள் அனைத்து மக்களுக்கும் ஓதிப்பார்த்து அவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவார்களா?
நபிமார்களுக்கு ஷைத்தான் இடஞ்சல் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைக்கு இவர்களுக்கு ஷைத்தானை விரட்டத் தெரிந்த யுக்தி நபிமார்களுக்கு ஏன் தெரியவில்லை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம்.
அல்குர்ஆன் (6 : 112)
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.
அல்குர்ஆன் (22 : 52)
ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள் ஷைத்தானை விரட்டுகிறார்களா?
ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
அல்குர்ஆன் (26 : 221)
ஷைத்தானை விரட்டுவதாகக் கூறுபவர்கள் மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களிடத்தில் தான் ஷைத்தான் இருக்கிறான்.
ஷைத்தானின் வலையில் சிக்கியவர்கள் மற்றவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவதாக நினைப்பது எவ்வளவு அறிவீனம் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். ஏமாற்றுபவர்களின் சதியில் சிக்கி தங்கள் பொருளையும் அறிவையும் இழந்துவிட வேண்டாம்.
ஷைத்தானால் ஏற்படும் தீங்கு
தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்கு கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.
மனிதன் தான் ஷைத்தானிற்கு கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அது போன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்யவிடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான். இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.
தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 119)
அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.
அல்குர்ஆன் (2 : 169)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
அல்குர்ஆன் (114 : 5)
அதிகபட்சமாக ஷைத்தானால் கணவனைப் பற்றி மனைவியிடத்திலும் மனைவியைப் பற்றி கணவனிடத்திலும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி இருவரையும் பிரிக்கும் வேûயைத் தான் செய்ய முடியும். இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், "(சொல்லிலிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை'' என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (5419)
வேறெதுவும் செய்ய முடியாது?
ஒருவரை பைத்தியமாக மாற்றுவது உடல் உறுப்புக்களைச் செயலிழக்கச் செய்து முடக்கிப் போடுவது போன்ற பாரதூரமான வேலைகளை ஷைத்தானால் செய்ய இயலாது. ஆனால் இவற்றையெல்லாம் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறித் தான் ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு
அல்குர்ஆன் (14 : 22)
"எனது அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் ஷைத்தானிடம் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
அல்குர்ஆன் (17 : 65)
அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை.
அல்குர்ஆன் (34 : 21)
குர்ஆன் கூறும் இந்த அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டால் பில்லி சூனியம் ஏவல் போன்ற பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். பில்லி சூனியம் ஏவல் போன்ற காரியங்கள் ஷைத்தானின் உதவியால் நடப்பதாகப் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட வசனங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்த்து எரிகிறது.
தீங்கை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரம்
நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல் தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டும் உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளளவு கூட ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானிற்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.
"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?'' என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் (48 : 11)
தீமைகளை ஏற்படுத்துவதும் அல்லாஹ்வின் செயலே என்று திருக்குர்ஆன் கூருகிறது.
"அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (5 : 76)
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
அல்குர்ஆன் (10 : 106)
இந்த விபரங்களை நன்கு மனதில் பதிவு செய்து கொண்டு நிங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ்களை அணுக வேண்டும். மேற்கண்ட ஆதாரங்களுக்கு முரணாக இல்லாத வகையில் அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களைப் பற்றிய விளக்கம்
முர்ரா பின் வஹப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் தன் குழந்தையுடன் வந்தார். அக்குழந்தைக்கு பைத்தியம் பிடித்திருந்தது. அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு. நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அக்குழந்தை குனமடைந்தது.
அஹ்மது (16890)
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஷைத்தானால் பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்பது போல் தெரிகின்றது.
ஷைத்தானுக்கு தீய எண்ணத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறு அதிகாரம் வழங்கப்படவில்லை. தீங்கை ஏற்படுத்தும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது என்பதை முன்பே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நிரூபித்திருக்கின்றோம்.
ஷைத்தானுக்கு பைத்தியம் ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று நம்புவது குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிரான நம்பிக்கையாகும். எனவே இந்த ஹதீஸை அதன் நேரடிப் பொருளில் விளங்கினால் குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் மோதவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.
பின்வரும் அடிப்படையை புரிந்து கொண்டால் மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இந்த ஹதீஸை விளங்கிக் கொள்ள முடியும்.
ஷைத்தானுடன் தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம்
கெட்ட காரியங்களையும் வெறுப்பிற்குரிய விஷயங்களையும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறும் வழக்கம் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அரபுமொழியிலும் உள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
அல்குர்ஆன் (5 : 90)
மது அருந்துவது சூதாடுவது பலிபீடங்களை உருவாக்குவது குறிபார்ப்பதற்கு அம்புகளை பயன்படுத்துவது இவையனைத்தும் கெட்ட மனிதர்களின் செயல்பாடுகளாகும். ஆனால் இவற்றை அல்லாஹ் ஷைத்தானின் செயல்களாக மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான்.
"நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார்.
அல்குர்ஆன் (18 : 63)
மறதி உட்பட எல்லா தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
அய்யூப் (அலை) அவர்கள் தனக்கு நோய் ஏற்பட்டிருக்கின்றது என்பதை தெரிவிக்க ஷைத்தான் என்னைத் தீண்டிவிட்டான் என்ற வார்த்தையை கூறியிருக்கிறார்கள்.
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).
அல்குர்ஆன் (38 : 41)
நோயை ஏற்படுத்துவது அல்லாஹ்விற்கு மட்டும் உரிய ஆற்றலாக இருந்தாலும் வெறுக்கத்தக்க விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்ற மரியாதை நிமித்தமாகவே நோயை ஷைத்தான் ஏற்படுத்தியதாக அய்யூப் (அலை) அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனில் வேறொரு இடத்தில் அய்யூப் (அலை) அவர்கள் செய்த இதே பிரார்த்தனையை அல்லாஹ் விவரிக்கிறான்.
"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
அல்குர்ஆன் (21 : 83.84)
38:41 வது வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை இந்த வசனம் தெளிவாக விவரிக்கிறது. 21:83 இந்த வசனத்தில் ஷைத்தானைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை. எனக்குத் துன்பம் நேர்ந்துவிட்டது என்றே அய்யூப் (அலை) அவர்கள் கூறியதாக உள்ளது.
தனக்கு துன்பம் ஏற்பட்டுவிட்டது என்பதைத் தான் அய்யூப் (அலை) அவர்கள் ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று குறிப்பிடுகிறார்கள். நோயை ஷைத்தான் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது என்பதற்கு அய்யூப் (அலை) அவர்களின் இக்கூற்று மிகச் சிறந்த சான்றாக உள்ளது.
இஸ்லாமிய நம்பிக்கைப்படி பைத்தியங்கள் எந்தத் தீமை செய்தாலும் அவர்கள் பாவிகளாக மாட்டார்கள். ஷைத்தானின் வேலை அனைவரையும் பாவிகளாக்குவது தான்.
பைத்தியமாக்கப்படுவதால் ஷைத்தானுக்கு நட்டமே தவிர லாபம் இல்லை. எனவே ஷைத்தான் யாரையும் பைத்தியமாக்கும் அதிகாரத்தை பெறவில்லை. அது அவனது அலுவலும் இல்லை.
கெட்ட குணம் மற்றும் கெட்ட செயல் உள்ளவர்களுக்கு ஷைத்தான் என்று கூறப்படும்
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (2 : 14)
கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3275

கருத்துகள்
கருத்துரையிடுக